கை கோர்த்து உறுதுணையாய் இருக்க யாரும் இல்லை என்ற கவலை வேண்டாம்… நம் கையே நமக்கு உதவி…! ஊக்குவிக்க, உடன் யாரும் இல்லை என்று கலங்க வேண்டாம்… நம் நம்பிக்கையே நமக்கு பலம்…! வெல்வதற்கு என்று தனி தகுதி இல்லை……

வாழ்க்கை வாழ்வதற்கே. வாழ்ந்து தான் பார்ப்போமே.
கை கோர்த்து உறுதுணையாய் இருக்க யாரும் இல்லை என்ற கவலை வேண்டாம்… நம் கையே நமக்கு உதவி…! ஊக்குவிக்க, உடன் யாரும் இல்லை என்று கலங்க வேண்டாம்… நம் நம்பிக்கையே நமக்கு பலம்…! வெல்வதற்கு என்று தனி தகுதி இல்லை……
வானமா எல்லை??
இல்லை.. இல்லை..
நம் மனமே எல்லை 😍
என் அருமை நட்பூக்ககளே, நம் இலக்கை அடைய நாம் செல்லும் வழிகளில் வரும் வலிகளை தாங்கி, வேதனைகளை சாதனைகளாக்கி வாழ்ந்து தான் பார்ப்போமே.. 💪🏻💪🏻
– என்றும் அன்புடன் உங்கள் மதுரை துர்கா
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. – குறள்
எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.
-என்றும் அன்புடன் உங்கள்
மதுரை துர்கா
எல்லோருக்கும் எல்லா திறமைகளும் இருக்காது… ஆனால் எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு திறமை கண்டிப்பாக இருக்கும்… ஆகவே நட்பூக்களே, நம் திறமைகளை அடையாளம் கண்டு அதில் வல்லமைகளை பெருக்கிக் கொண்டு முயற்சிகளை முன் வைத்து மகிழ்வோடு நிம்மதியாய் வாழ்ந்து தான் பார்ப்போமே… –
என்றும் அன்புடன் உங்கள் மதுரை துர்கா
பரந்த உலகில்
எண்ணம் மட்டும் ஏன் குறுகலாய்..
இதயம் திறந்து
பரந்த மனதுடன்
வாழ்ந்து தான் பார்ப்போமே.
மன அழுத்தம் நீக்கி , நம்பிக்கை ஒளி ஏற்றி, வாழ்க்கை பாதையில் உற்சாகமாய் முன்னேற, நாம் படித்து தெரிந்த, பிறர் கூறி கேட்ட, சொந்த அனுபவத்தில் உணர்ந்த விஷயங்களை சுவாரசியமாக சின்னஞ்சிறு கதைகள் வழியாக உங்களிடம் பகிர்ந்து கொள்வதே இந்த பக்கத்தின் நோக்கமாகும்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறம்
ஆகுல நீர பிற – குறள்