கை கோர்த்து உறுதுணையாய் இருக்க
யாரும் இல்லை என்ற கவலை வேண்டாம்…
நம் கையே நமக்கு உதவி…!
ஊக்குவிக்க, உடன் யாரும்
இல்லை என்று கலங்க வேண்டாம்…
நம் நம்பிக்கையே நமக்கு பலம்…!
வெல்வதற்கு என்று தனி தகுதி இல்லை…
நம்பிமுயன்றோர் தோற்றதே இல்லை…!
வாழ்க்கை வாழ்வதற்கே…
என்றென்றும் நல்லதே நினைத்து நல்லதே நடத்தி ஆனந்தமாய்
வாழ்ந்து தான் பார்ப்போமே…!
– என்றும் அன்புடன் உங்கள்
மதுரை துர்கா
01.04.2021